சம்பியனாகியது யாழ் ஊடக அமையம்

யாழ்.ஊடக அமைய அணிக்கும் சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் நட்பு ரீதியான துடுப்பாட்ட போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி கழக மைதானத்தில் நடைபெற்றது.

வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் ந.பென்ராசா, கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீறிகுமரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகியோர் இப் போட்டியின் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 மூன்று போட்டிகள் கொண்ட இத் தொடரில் இரண்டு போட்டிகளை வெற்றி கொண்ட யாழ் ஊடக அமைய அணியினர் தொடரை கைப்பற்றினர்.

இப் போட்டியில் தொடர் ஆட்டநாயகனாக ந.சுநேந்திரனும், சிறந்த துடுப்பாட்ட வீராக நி.கவிந்தனும், சிறந்த பந்துவீச்சாளராக. கஜனும் தெரிவு செய்யப்பட்டனர்


No comments

Powered by Blogger.