முதலவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 18 ஓட்டங்களைக் கொடுத்து, 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றியிலக்காக 186 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
அணி சார்பில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டநாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
Post a Comment