பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணம் வென்ற முல்தான் சுல்தான்ஸ்
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தொடரினை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்தது.
கடந்த 9-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் நடபெற்றது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும் வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஷாவர் சல்மி மோதின. டாஸ் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. ஷோயப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 60 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்தார்.
பெஷாவர் அணி சார்பில் சமீன் குல், மொகமது இம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெஷாவர் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெஷாவர் அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
பெஷாவர் அணியில் அதிகபட்சமாக ஷோயப் மாலிக் 48 ரன்னும், கம்ரான் அக்மல் 36 ரன்னும் ரோவான் பாவெல் 23 ரன்னும் எடுத்தனர்.
முல்தான் அணி சார்பில் தாஹிர் 3 விக்கெட்டும், இம்ரான் கான், முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
ஷோயப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளினை வென்றார்.
Post a Comment