யாழில் சிறப்பாக நடைபெற்ற நம்மவர்களின் கௌரவிப்பு
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடமாகாணம் சார்பில் யெப்னா ஸ்ரலியன்ஸ் அணிக்காக பங்கு கொண்ட வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று யாழ் அரியாலையில் இடம்பெற்றது.
கொரோனா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் நடைபெற்ற நிகழ்வில் யாழ் மத்திய கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி அதிபர்களுடன் யாழ் துடுப்பாட்ட சங்க பிரதிநிதிகளும் யாழின் துடுப்பாட்ட முக்கியஸ்தர்களும் பங்கு பங்குபற்றியமை சிறப்பாகும்.
வாகனத் தொடரணி மூலம் பளையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள் மேள வாத்தியம் முழங்க வரவேற்க்கபட்டனர்.
இதன் போது வியாஸ்காந்த், கபில்ராஜ், டினோசன், விஜயராஜ் ஆகிய வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயல்பட வடமாகாண துடுப்பாட்ட சங்க தலைவர் ரதீபன் அவர்களும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
Post a Comment