யாழ் அணி சம்பியன்
வடமாகாண பிரீமியர் லீக் 2020! வெற்றிவாகை சூடியது யாழ் அணி.
வடமாகாண பிரீமியர் லீக் தொடரின் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் மற்றும் முல்லை அணியினர் மோதிக்கொண்டர்.
பிரமாண்ம இறுதி சமரில் இமாலய வெற்றியினை பதிவு செய்து மீண்டுமொருமுறை தமது பலத்தினை வவுனியா மண்ணில் பதிவு செய்தார்கள் யாழ் அணியினர்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் அணியினர் முதலில் துடுப்பட்டத்தினை தெரிவு செய்து ஆறு விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டனர்.
192 ஓட்டங்கள் என்கிற இமாலய ஓட்ட இலக்கினை வெற்றியிலக்காகக் கொண்டு ஆடிய முல்லை அணியினர் யாழ் அணியினரின் சிறப்பான பந்துவீச்சினை எதிர் கொள்ள முடியாது
12.3 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 53 ஓட்டங்களை மட்டுமே பெற்று 138 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக யாழ் அணி சார்பாக இறுதிப்போட்டியில் 52 ஓட்டங்களையும் மூன்று விக்கட்டுக்களையும் கைப்பற்றிய சூரியகுமார் அஜித் தெரிவுசெய்யப்பட்டார்.
Post a Comment