வடமாகாண சம்பியனாகியது யாழ் தபாலகம்

வடமாகாண தபால் திணைக்களங்களுக்கு இடையே நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டில் சம்பியனாகிய யாழ்மாவட்ட தபாலக அணி தேசிய ரீதியான தொடருக்கு தெரிவாகியது.

146வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட தபால் திணைக்களத்தால் மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா வின்ஸ்ரார் கழக மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு ,மன்னார்,வவுனியா ஆகிய 5 அணிகள் மோதிய போட்டியில் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பணம் மற்றும் வவுனியா அணிகள் தெரிவாகி இருந்தன.

இறுதியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வவுனியா மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்ய  முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்மாவட்ட தபாலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்து பரிமாற்றத்தில் 8 இலக்கினை இழந்து 81 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 82 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய வவுனியா மாவட்ட தபாலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பரிமாற்றத்தில் 8 இலக்கினை இழந்து 66 ஓட்டங்களை மட்டுமே பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.

யாழ்மாவட்ட தபாலக அணி 2020 ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியதோடு தொடர்ந்து மூன்றாது வருடமாகவும் யாழ்மாவட்ட தபாலக அணி சம்பியன் கிண்ணத்தை தன் வசமாக்கியது குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.