பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா தொற்று
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான மொஹமட் ஹபீஸ், வஹாப் ரியாஷ், இம்ரான் கான், பகர் ஷமன், மொஹமட் ரிஷ்வான், காஷிப் பட்டி மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த அணியில் இணைக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பரிசோதனையின் போதே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முன்னதாக நேற்று அதே அணியில் இணைக்கப்படவிருந்த மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment