யாழ் உதைபந்தாட்ட லீக்கினால் முன்னெடுக்கப்பட்ட இடர்கால நிவாரண பணி

உலக உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கு வழங்கப்பட்ட கோவிட்-19 நிவாரண நிதியிலிருந்து யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு மூன்று லட்சம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் வழங்கிவைகப்பட்டுள்ளது.
மேற்படி உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை யாழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் இமானுவேல் ஆணல்ட் தலைமையில் யாழ் அரியாலை பகுதியில் அமைந்துள்ள யாழ் உதைப்பந்தாட்ட பயிற்சி மைதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண உதைபந்தாட்ட சம்மேளனத்தில் உள்ள 33 கழகங்களுக்கு மேற்படி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில் தரம் ஒன்று அணியில் உள்வாங்கப்பட்ட குருநகர் பாடும்மீன்,நாவாந்துறை சென்மேரிஸ் அணிகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.







No comments

Powered by Blogger.