கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் யாழ் நாவாந்துறை சென்நீக்கிலஸ்

பிரிவு 2 கிண்ணத்தை வெற்றி கொள்ளும் அதிக வாய்ப்புடன் இறுதியாட்டத்தில் மோதுகின்றது
யாழ் நாவாந்துறை சென்நீக்லஸ் விளையாட்டு கழகம்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படுக்கின்ற பிரிவு 2 உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (08-03-2020) அன்று பொலனறுவை தேசிய விளையாட்டு திடலில்  நடைபெறுகின்றது இறுதியில் யாழ் நாவாந்துறை சென்நீக்லஸ் வி.க மற்றும் kurunduwatte United SC அணி மோதவுள்ளது

இப் பருவகால தொடரில் யாழின் இரு அணிகளான ஆனைக்கோட்டை யூனியன் மற்றும் நாவாந்துறை சென்நீக்லஸ் அணிகள் மிக சிறப்பாக செயற்பட்டு  அரையிறுதிக்கு தெரிவாகி இருந்ததுடன் தொடர் முழுவதும் சிறப்பாக செயற்பட்டு வரும்  சென்நீக்லஸ் அணி அரையிறுதியில் மிகச்சிறப்பான வெற்றியை பதிவு செய்து இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது

சமகாலத்தில் சிறப்பாக செயற்பட்டு வரும் யாழ் நாவாந்துறை சென்நீக்லஸ் வி.க இப் பருவகால பிரிவு 2 தொடரின் கிண்ணத்தினை கைபெற்றி யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் என யாழ் உதைபந்தாட்ட ரசிகர்கள் சார்பில் வாழ்துகின்றோம்.

 

No comments

Powered by Blogger.