ஒருநாள் போட்டியையும் வெற்றி பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான 18ஆவது ஒரு நாள் போட்டி  14/03/2020 சனிக்கிழமை சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 

பந்துவீச்சாளர்களின் முழுமையான ஆதிக்கத்துடன் நகர்ந்த போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரியினர் 33 ஓட்டங்களால் வெற்றி பெற்று வடக்கின் பெரும் போர் ஒரு நாள் போட்டித் தொடரில் தொடர்ச்சியான ஐந்தாவது வருடமாக வெற்றி பெற்றுள்ளனர்.

போட்டியில் மத்திய கல்லூரி அணியினர் பெரும் போரில் களமிறங்கிய அணியிலிருந்து இரண்டு் மாற்றங்கள் திவாகரன், கவிதர்சன் ஆகிய வீரர்களிற்கு பதிலாக நியூட்டன், கௌதம் ஆகிய இரு இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தனர்.

மறுபக்கம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வடக்கின் போரில் களமிறங்கிய அதே பதினொருவருடன் களமிறங்கியிருந்தது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி அணித்தலைவர் வியாஸ்காந் முதலில் பந்துவீச்சினை தெரிவு செய்தார் அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய  சென் ஜோன்ஸினை அணியினை தமது சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பின் மூலம் 94 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்தியது மத்திய கல்லூரி அணி. பந்துவீச்சில் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் இயலரசன் மற்றும் நிதுசன் தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்தனர்.
சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்கள் சௌமியன் (16), தனுஜன் (14) , டினோசன் (14) ஓட்ட எண்ணிக்கையினை பெற்றிருந்தனர். உதிரிகளாக 24 ஓட்டங்களை மத்திய கல்லூரி விட்டுக் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னர்.
95 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய மத்தியின் முதலாவது விக்கெட்டினை இரண்டாவது ஓவரிலேயே அபிஷேக் சாய்த்தார். தொடர்ந்தும்  அபிஷேக்கின் பந்துவீச்சிற்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த மத்திய கல்லூரியினர் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.
தொடர்ந்தும் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்ட போதும் ஏழாம் இலக்கத்தில் களமிறங்கிய ராஜ்கிளின்டன் ஓட்டங்களினை சேகரித்து நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார் எனினும் எட்டாவது விக்கெட்டாக 24 ஓட்டங்களோடு ராஜ்கிளின்டனும் ஆட்டமிழக்க மத்தியின் இறுதி நம்பிக்கையும் கைநழுவியது.
தொடர்ந்து 61 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை மத்திய கல்லூரி அணி பறிகொடுக்க துடுப்பாட்டத்தில் தடுமாறிய போதும் சென். ஜோன்ஸ் வீரர்கள் சிறந்த பந்துவீச்சினூடாக தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் பெற்றுக்கொண்டனர். 
போட்டியின் ஆட்ட நாயகனாக 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்த சென். ஜோன்ஸ் கல்லூரியின் அண்டன் அபிஷேக் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

போட்டிச் சுருக்கம்
சென் ஜோன்ஸ்  94 (36.3)
துடுப்பாட்டம்
சௌமியன் 16,தனுஜன் 14,
பந்துவீச்சு சென்றல் நிதுசன் 3/08, இயலரசன் 3/27
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 61(25.1)
துடுப்பாட்டம் ராஜ்கிளின்டன் 24, சாரங்கன் 11,
பந்துவீச்சு
அபிஷேக் 5/20, விதுசன் 2/12, டினோசன் 2/16
33 ஓட்டங்களால் சென ஜோன்ஸ் கல்லூரி வெற்றி

No comments

Powered by Blogger.