சமநிலையில் முடிவடைந்த 20வது வீரர்கள் போர்

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் ஆதிக்கத்துடன் சமநிலையில் நிறைவடைந்த வீரர்கள் போர்.

 மகாஜனா - ஸ்கந்தா அணிகள் மோதும் வீரர்களின் போர் என வர்ணிக்கப்படும் 20வது  மாபெரும் துடுப்பாட்டப் போட்டி (28,29/02/2020) வெள்ளி,சனி தினங்களில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
   
முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி முதல் இன்னிங்ஸில் 9 இலக்குகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்த

துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஸ்கந்தா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68/4 என்ற இக்கட்டான நிலையில் காணப்பட்ட போதும் டான்ஸன்-78, பிரிந்தன்-117, கௌரிசங்கர்-129 ஓட்டங்களின் உதவியுடன் வீர்களின் போரில் அதிகூடிய ஓட்ட சாதனையுடன் 500 ஓட்டங்களை கடக்க 20வது வீரர்கள் போர் சமநிலையில் நிறைவடைந்தது.

*சிறந்த துடுப்பாட்ட வீரன்- பிரிந்தன் (SVC)
*சிறந்த பந்து வீச்சாளர் - சதுர்ஜன் (MC)
*சிறந்த களத்தடுப்பாளர் - கிரிஷன் (MC)
*சிறந்த சகலதுறை வீரன் - கௌரிசங்கர் (SVC)
* ஆட்ட நாயகன் - டான்ஷன் (SVC)

No comments

Powered by Blogger.