சம்பியனாகியது அரியாலை கில்லாடிகள் 100

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் தொடரின் இறுதி  போட்டியில் அரியாலை கில்லாடிகள் நூறு அணி சம்பியன்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் தொழில் முறைரீதியான கிரிக்கெட் தொடரின் இறுதி  போட்டி கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மைதானத்தில் கடந்த 14.03.2020 அன்று இரவு மின்னொளியில் நடைபெற்றது. மேற்படி தொடரில் அரியாலை கில்லாடிகள் நூறு  அணியினை எதிர்த்து கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தாடி பத்து பந்து பற்றிமாற்றத்தில் எழு விக்கெட்டுகளை இழந்து அறுபது ஓட்டங்களை மாத்திரம் பெற்றுகொண்டது. அரியாலை கில்லாடி நூறு அணி சார்பாக வனிதன் இரண்டு விக்கெட்டுகளையும் அருண்ராஜ் ஒரு விக்கெட்டையும்  வீழ்த்தினர்.கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பில் சதீஸ் பதினேழு ஓட்டங்களையும் ஷாருஜன் பதினைந்து ஓட்டங்களையும் பெற்றனர்.

அறுபத்தொரு ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் நூறு அணி எழு பந்துபரிமாற்றம் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை  இழந்து அறுபத்தொரு ஒட்டங்களை  பெற்று ஏழு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது.அரியாலை கில்லாடி நூறு அணி சார்பாக ஜீவிதன் இருபத்துமூன்று ஓட்டங்களையும் சரண்ராஜ் பதினைந்து ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில்  கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக ரோமன் மற்றும் கபிசாந் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக அரியாலை கில்லாடிகள் நூறு அணியின் ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக கல்வியங்காடு சூப்பர் கிங்க்ஸ் அணியின் சதீஸ் தெரிவு செய்யபட்டார்.இவ் வெற்றியின் முலம் அரியாலை கில்லாடிகள் நூறு  அணியினர் நான்கு லட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.