இறுதியில் அரியாலை கில்லாடிகள் 100

அரியாலை கில்லாடிகள் 100 அணி இறுதியில்.

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் தொழில் முறைரீதியான துடுப்பாட்ட தொடரின் முதலாவது தகதிகான் போட்டி ஞானபாஸ்கரோதயா மைதானத்தில் 09/03 இரவு மின்னொளியில் நடைபெற்றது. மேற்படி தொடரில் அரியாலை கில்லாடிகள் 100 அணியினை எதிர்த்து காரை கிங்ஹோப்றாஸ் அணி மோதியது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காரை கிங்ஹோப்றாஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி  78/10(9.4) ஓட்டங்களை பெற்றுகொண்டது அணி சார்பாக துசியந்தன்-18(8), கஜமுகன்-12(7)
கனிஸ்ரன்4/11(2)

79ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய காரைகிங் ஹோப்றாஸ் அணியினை அரியாலை கில்லாடி 100 வீரர்கள்  சிறப்பான பந்து வீச்சின் மூலம் கட்டுப்படுத்த  58/8(10) ஓட்டங்களை மட்டும் பெற்று 20ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அணி சார்பாக உமைசுதன்-26(26)
அருன்ராஜ்-3/9(2).

ஆட்டநாயகன்-அருன்ராஜ் இவ் வெற்றிமுலம் அரியாலை
கில்லாடிகள் 100 நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதோடு தோல்வியடைந்த காரை கிங்ஹோப்றாஸ் அணி 2வது தெரிவு போட்டிக்கு தகதி பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.