அரியாலை கில்லாடிகள் 100 இன் ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்த 'GMPL' லீக் போட்டிகள்

யாழ் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் ' 'GMPL' தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் தகுதிசுற்று போட்டிகள் 09/03 திங்கட்கிழமை முதல் மின்னொளியில் ஆரம்பமாக உள்ளது.
8அணிகள் பங்குபற்றிய மேற்படி தொடரில் வெற்றிபெற்ற அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
*)அரியாலை கில்லாடிகள் 100
*)காரை கிங் ஹோப்றாஸ்
*)நல்லூர் ஜொலி பிரண்டஸ்
*)கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ்
அந்தவகையில் முதலாவது தகுதிசுற்றில்  அரியாலை கில்லாடிகள் 100 எதிர் காரை கிங் ஹோப்றாஸ் அணிகளும் , விலகல் சுற்றில் நல்லூர் ஜொலி பிரண்டஸ் எதிர் கல்வியங்காடு சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதவுள்ள அதேவேளை 2வது தகுதி சுற்றில் 1வது போட்டியில் தோல்வியுறும் அணியுடன் 2வது போட்டியில் வெற்றிபெறும் அணியும் மோதவுள்ளது.

மேற்படி தொடரின் இறுதிப்போட்டி 14/03 சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ளமை குறிப்பிட தக்கது

No comments

Powered by Blogger.