சம்பியனாகியது அரியாலை கில்லாடிகள் 100

நெல்லியடி 'நெல்லை பிலாஸ்ரர் விளையாட்டு கழகம்' நடாத்திய 'NBCM' பருவகாலம் 2 தொடரின் சம்பியனாகி நடப்பு சம்பியன் அந்தஸ்தை தக்கவைத்து கொண்டது அரியாலை கில்லாடிகள் 100

09/02 ஞாயிற்றுகிழமை நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வடமராட்சி 'லைட்டிங் ஹோப்ஸ்' அணியினை 9இலக்குகளால் வீழ்த்தி வரலாறு படைத்தது அரியாலை கில்லாடிகள் 100.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய லைட்டிங் ஹோப்ஸ் ஆரம்பம் நன்றாக அமைந்த போதும் {39/0(3)} பின்வரிசை வீரர்கள் பிரகாசிக்க தவறியமையால் அனைத்து இலக்குகளையும் இழந்து 68 ஓட்டங்களை மட்டும் பெற்று கொண்டது.

லைட்டிங் ஹோப்ஸ-68/10(9.5)
ஜெயமயூரன்-19
ரஜீவன்-17
கபில்-6/9(2)
ராம்குமார்-2/22(2)

69 ஓட்ட வெற்றி இலக்கோடு ஆடிய 'அரியாலை கில்லாடிகள் 100' அணித்தலைவர் அஜனின் பொறுப்பான ஆட்டதின் உதவியுடன் 9 இலக்குகளால் வெற்றி இலக்கினை அடைந்தது.

அரியாலை கில்லாடிகள் 100 - 69/1(7.1)
அஜன்-46
ஜெசிந்தன்-08
பிரணவன்-1/4(2)

ஆட்டநாயகன்- கபில் (அரியாலை கில்லாடிகள். 100)

No comments

Powered by Blogger.