நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வுகள் நாளை ஆரம்பம்

நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் நாளை காலை யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியில் ஆரம்பமாகின்றது அந்த வகையில் காலை 8.30 மணிக்கு ஆண்,பெண் இருபாலாருக்குமான கரம்  போட்டிகளும், காலை 9.30மணிக்கு ஆண்,பெண் இருபாலாருக்குமான சதுரங்க போட்டிகளும் நடைபெறவுள்ளது. மேலும்

ஞாயிற்றுகிழமை காலை 8.30 மணிக்கு பெண்களுக்கான மேசைபந்தாட்ட போட்டியும்,
பி.ப 3.00மணிக்கு ஆண்களுக்கான மேசைப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெறவுள்ள அதேவேளை
பி.ப 4மணிக்கு ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளது. எனவே போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் கழகங்களை குறித்த நேரத்திற்க்கு சமூகமளிக்குமாறு நல்லூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.