கிளிநொச்சியில் உதயமாகியது உருத்திரபுரம் உதைபந்தாட்ட நடுவர்சங்க சம்மேளனம்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற உதைபந்தாட்ட நடுவர்சங்க இன்மையினை ஈடுசெய்யும் முகமாக உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தின் முயற்சியில் கிளிநொச்சி உருத்திரபுரம் உதைபந்தாட்ட நடுவர் சங்க சம்மேளனம் நேற்றைய தினம் கழக மண்டபத்தில் அங்குரார்பனம் செய்யப்பட்டது.
மேற்படி சம்மேளனத்தில் உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தில் உதைபந்தாட்ட நடுவர்களுக்கான தகுதியினை கொண்டுள்ள அனைவரும் உள்வாங்கப்பட்டதுடன் இவ் சம்மேளனம் உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தின் கட்டுகோப்புடன் தனியான நடுவர்சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் என தீர்மானிக்கப்பட்டதோடு நடுவர்களுக்கான சீருடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கழகதலைவர்  திரு மா.ராமகரன் தலமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்க்கு கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுதுறை இணைப்பாளர் திரு ப.அனுராகாந்தன் கரைச்சி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு அ.பிரபாகரன் கழக உறுப்பினர்கள் உதைபந்தாட்ட ஆர்வளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

மேலும்

இதுவரை காலமும் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்ற உதைபந்தாட்ட தொடர்களில் யாழ் மாவட்ட நடுவர் சங்க உறுப்பினர்களே பணியாற்றி வருகின்ற நிலையில் மேற்படி நடுவர்சங்க சம்மேளனம் உருவாக்கம் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்டத்தில் பெரும் பங்காற்றும் என நம்பபடுகின்றது.




No comments

Powered by Blogger.