சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்திய ஆஸி

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஆஸி… வோர்னர், பிஞ்ச் அதிரடி.


இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் டேவிட் வோர்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக அவுஸ்ரேலியா அணி எந்தவித விக்கெட் இழப்பும் இன்றி வெற்றிபெற்றுள்ளது.

மும்பாய் வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்பிரகாரம் முதலில் களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பாக ஷிகர் தவான் 74 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் பட் கம்மின்ஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 256 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி சதம் மூலம்  37.4 ஓவர்களில் எந்த விக்கெட் இழப்பும் இன்றி வெற்றி இலக்கை கடந்தது.

அவுஸ்ரேலியா அணி சார்பாக டேவிட் வோர்னர் 128 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


எனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்ரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

No comments

Powered by Blogger.