பேராசிரியர் கெனடி ஞாபகார்த்த துடுப்பாட்ட தொடர்

பேராசிரியர் கெனடி ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் அமரர் பேராசிரியர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடியின் ஞாபகாரத்தமாக மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அணிகளுக்கு இடையிலான இப் போட்டிகளில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ள முடியும் என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.

விளையாட்யடு துறையை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் குறித்த போட்டிகள் 6 பேர் 5 பந்துபரிமாற்றம் கொண்ட போட்டியாக நடைபெறும். இப் போட்டிகளில் பாடசாலை அணிகளும் பங்கு கொள்ள முடியும்.

இப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பண பரிசினை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி கட்டணம் இரண்டாயிரம் ரூபாவுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

 விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இடங்கள் மற்றும் போட்டி விதமுறைகள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.