மகாஜனா கல்லூரியின் தேசிய வீராங்கனை சானு பாஸ்கரன்

மகாஜனா பெண்கள் உதைப்பட்ட அணியின்
சிரேஷ்ட வீராங்கனை சானு பாஸ்கரன்.

தேசியமட்ட சாம்பியனான மகாஜனக் கல்லூரி 20 வயது பெண்கள் அணியின் சிரேஷ்ட வீராங்கனையாக சானு பாஸ்கரன் விளங்குகின்றார். இவர் 2011 டிசெம்பரில் பெண்கள் உதைப்பட்ட அணி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையும் விளையாடி வருகின்ற சிரேஷ்ட வீராங்கனையாக காணப்படுகின்றார்.

சிறுவயதிலிருந்தே உதைப்பட்டத்தில் திறமையை வெளிப்படுத்திவரும் சானு, 2013,2014 களில் இலங்கை 14 வயது பெண்கள் தேசிய அணிகளில் இடம்பிடித்து விளையாடியவர். இவர்தான் தேசிய மட்டத்தில் பெண்கள் உதைபந்தாட்ட அணியொன்றில் விளையாடிய முதல் தமிழ்மங்கை என்ற சிறப்புக்கும் சாதனைக்கும் உரியவர். இவர் இவ்வருடம் இலங்கை தேசிய பெண்கள் உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்து நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய உதைபந்தாட்ட தொடரில் விளையாடிய பெருமைக்குரியவர். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகிய முதல் தமிழ்மங்கையாகவும் திகழ்கின்றார்.

இலங்கை பாடசாலைகள் உதைபந்தட்ட சங்கத்தால் நடாத்தப்பட்ட 18 வயது பெண்கள் அணிக்கான உதைபந்தாட்ட போட்டி - 2017 இன் தொடர் 2018 ஜனவரியில் கம்பளையில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி கம்பளை சாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த இறுதிப்போட்டியில் மகாஜனாவை எதிர்த்து விளையாடிய யா/பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை அணி ஆட்டநேர இடைவேளைக்கு முன்னர் 2 கோல்களை பெற்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் அணிக்கு தலைமைதாங்கிய சானு இடைவேளைக்குப் பின்னர் இரண்டாவது பாதியாட்டத்தில் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து 2 கோல்களை பெற்று ஆட்டத்தை சமநிலைபடுத்தினார். வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் கோல்காப்பாளராக செயற்பட்டு மகாஜனா வெற்றிக்கிண்ணம் பெற வழிவகுத்தார்.

இவ்வருடம் நடைபெற்ற தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டியிலும் மகாஜனா வெற்றிக்கிண்ணம் பெற கடினமாக விளையாடினார். குறிப்பாக கடந்த 3 வருடங்களாக(2016,2017,2018) சாம்பியன்களாக  வலம்வந்த குருணாகல் மலிகதேவ பாலிக வித்தியாலயத்தை மகாஜனா அரையிறுதியாட்டத்தில் சந்தித்தது. ஆட்டம் 1:1 என சமநிலையில் முடிவடைந்தது. சமநிலை தவிர்ப்பு உதையில் கோல்காப்பாளராக செயற்பட்ட சானு, எதிரணியின் அடுத்தடுத்த 3 சமநிலை தவிர்ப்பு உதைகளையும் கடினமாக போராடி தடுத்துநிறுத்த, 4 சமநிலை தவிர்ப்பு உதைகள் முடிவில் 3:0 என்ற கோல்கள் அடிப்படையில் மகாஜனா  இறுதிக்குள் நுழைந்தது.
              இறுதிப்போட்டியிலும் சானுவின் பங்களிப்பு வலுவாக இருந்தது. ஆட்டம் தொடங்கி 17 ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல்கம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட 45 மீற்றர் தூரத்தில் மகாஜனாவுக்கு கிடைத்த நேர்சுயாதீன உதையை மிகவும் இலாவகமாக உதைத்த சானு, மிகவும் அற்புதமான கோலை பெற்றுக்கொடுத்தார். இதுவே இறுதிப்போட்டியின் ஒரேயொரு கோலாகவும் மகாஜனாவின் வெற்றிக்கோலாவும் அமைந்தது.
          அகில இலங்கை பாடசாலைகள் 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட தொடரின் சிறந்த வீராங்கனை என்ற மௌடத்தையும் சானு பெற்றுக்கொண்டார். மேலும் பல சாதனைகளை படைக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.
நன்றி வசந்தரூபன் கனகரட்ணம்மகாஜனா பெண்கள் உதைப்பட்ட அணியின்

அகில இலங்கை பாடசாலைகள் 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட தொடரின் சிறந்த வீராங்கனை என்ற மௌடத்தையும் சானு பெற்றுக்கொண்டார்.

மேலும் பல சாதனைகளை படைக்க Yarlsports இன் வாழ்த்துக்கள்.
நன்றி வசந்தரூபன் கனகரட்ணம்

No comments

Powered by Blogger.