வடக்கு கிழக்கு ரீதியான பூப்பந்தாட்ட தொடர்

"லேடன் பூப்பந்தாட்ட லீக்" நடாத்தும் வடக்கு,கிழக்கு மாவட்ட அணிகள் பங்குபற்றும்  பூப்பந்தாட்ட சுற்று தொடரின் ஊடகசந்திப்பு இன்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மேற்படி தொடர் 28,29 சனி,ஞாயிறு தினங்களில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் ஆரம்பமாக உள்ளது. தொடரிற்க்கு வடக்கு கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களுக்கும் மாவட்ட விளையாட்டு அதிகாரிகளின் ஊடாக அழைப்பு விடப்பட்டபோதும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்ட அணிகள் மட்டும் பங்குபற்ற வில்லை எனவும் ஏனைய 6மாவட்ட அணிகளுடன் மொத்தம் 8 அணிகள் பங்குபற்றுவது குறிப்பிடதக்கது. தொடருக்கு 1ம் இடம்-50000/-, 2ம் இடம்-30000/-, 3ம் இடம்-20000/- பணப்பரிசுகளுடன் மேலும் பல தனிநபர் விருதுகள் மற்றும் வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் இரு மாவட்டங்களிலும் பல பூப்பந்தாட்ட வீரர்கள் இருந்தும் மேற்படி தொடரில் பங்குபற்றாது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தனர். எது எவ்வாறு இருப்பினும் பாதிக்கப்பட போவது மாவட்ட பூப்பந்தாட்ட வீர்கள் என்பதே நிதர்சனமான உண்மை. வடக்கு கிழக்கை பொறுத்தமட்டில் பூப்பந்தாட்ட தொடர்கள் நடைபெறுவது மிகவும் குறைவாக காணப்படும் நிலையில் இவ்வாறான தொடர்கள் நடைபெறுவது எமது வீரர்களை தேசியத்தில் கால் பதிக்க மிகவும் ஊன்றுதலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஆகவே இனிவரும் காலங்களிலாவது எட்டு மாவட்ட அணிகளும் பங்குபற்ற வேண்டும் என எதிர் பார்க்கபடுகின்றது.

No comments

Powered by Blogger.