வவுனிய யங்ஸ்ரார் பூப்பந்தாட்ட தொடர் சாதித்த மன்னார் வீரர்கள்

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகம் கடந்த ஞாயிற்று கிழமை வடக்கு,கிழக்கு மாகாண ரீதியாக நடாத்திய ஆண்களுக்கான திறந்த  பூப்பந்தாட்ட தொடரின் தனிநபர் போட்டியில் மன்னார் வீரர்கள் ஆதிக்கம்.
தொடரின் இறுதியில் மன்னார் வீரன் அ.நிஷந்தபாலனை 21:17,21:19 நேர் செற்களில் வீழ்த்தி மகுடம் சூடினார் பிரிதொரு மன்னார் மாவட்ட வீரன்அ.திலக்‌ஷன். இறுதி இரு மன்னார் வீரர்களும் அரையிறுதியில் யாழின் றெமின்ஷன்,துஷாந்தன் ஆகியோரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தமை குறிப்பிடதக்கது.
மேற்படி தொடர் வுனியா பொது உள்ளக அரங்கிலும், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக உள்ளக அரங்கிலும் நடைபெற்றமை குறிப்பிட தக்கது.

No comments

Powered by Blogger.