வவுனியா யங்ஸ்ரார் பூப்பந்தாட்ட தொடர் யாழ் வீரர்கள் அசத்தல்

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகம் கடந்த ஞாயிற்று கிழமை வடக்கு,கிழக்கு மாகாண ரீதியாக நடாத்திய  40வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்ட தொடரில் தனி,இரட்டையர் போட்டிகளில் யாழ் வீரர்கள் அசத்தல் ஆட்டம்.
தனிநபர் போட்டியில் யாழ் வீரன் ச.காண்டீபன் 21:6,21:6 நேர் செற்களில் மட்டக்களப்பு மாவட்ட வரதராஜன் அவர்களையும், இரட்டையர் போட்டியில் யாழ் காண்டீபன் & குகதாஸ் இணை 21:17,21:13 நேர் செற்களில் வவுனியா கமலன் & ராஜன் இணையினையும் வீழ்த்தி வடக்கு,கிழக்கு மாகாண சம்பியனாகியது. மேற்படி தொடர் வுனியா பொது உள்ளகஅரங்கிலும், யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக உள்ளக அரங்கிலும் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.


No comments

Powered by Blogger.