'கற்பகசமர்' குருநகர் பாடும்மீன் வசம்

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்திய கற்பக சமர் உதைபந்தாட்ட தொடரினை சாந்தன்,கிஷோத் ஆகியோரின் கோல்களின் உதவியுடன் 2:0 ரீதியில் வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி சம்பியனாகியது குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகம். நேற்றைய தினம் மின்னொளியில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தார். தொடரின் சிறந்த நன்நடத்தை அணியாக இரணைமாதாநகர் சென்மேரிஸ் விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டதோடு
*போட்டியின் ஆட்டநாயகன்- சாந்தன்(பாடும்மீன்)
*போட்டியின் சிறந்த கோல் காப்பாளர்-பிரதீபன்(பாடும்மீன்)
*சிறந்த மத்தியகள வீரன்-ஜெறிங்ஷன்(பாடும்மீன்)
*சிறந்த பின்கள வீரன்-திலீபன்(யாழ் அன்ரனிஸ்)
 *தொடர் நாயகன்-அருள் நியூட்டன்(ஜெகமீட்பர்) சாதித்த அனைத்து வீரர்களுக்கும் சிறந்த தொடரினை நடாத்தி முடித்த கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகத்திற்க்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கின்றோம்

No comments

Powered by Blogger.