இறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...

இலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிறுதிபோட்டி யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி அரச உத்தியோகத்தர் அற்ற வீரரை இணைத்து பங்குபற்றியமை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து யாழ் ஆசிரியர் தெரிவு அணி இறுதிக்குள் நுழைந்தது.

யாழின் பிரபல்யமான  தனியார் கல்லூரி ஆசிரியர் ஒருவர் யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி சார்பாக போட்டியில் பங்குபற்றியமை கண்டறியப்பட்ட நிலையில் நேரடியாக யாழ் ஆசிரியர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

யாழ் ஸ்போர்ட்ஸ்க்காக கொழும்பில் இருந்து தினேஷ்

No comments

Powered by Blogger.