அரியாலை சரஸ்வதியின் T10 தொடர்
அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தப்படவுள்ள அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான T10 தொடர் நாளை(10/08) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது 12அணிகள் பங்குபற்றும் தொடரின் முதல் சுற்றுபோட்டிகள் 10,11ம் திகதிகளிலும் காலிறுதி போட்டிகள் 12திகதியும் ,அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி 14 புதன்கிழமையும் நடைபெறவுள்ளது. யாழ் மாவட்டத்தின் வீர,வீரங்கனைகளின் வளர்ச்சிக்கு வருடாந்தம் பல தொடர்களை நடாத்தி உந்து சக்தியாக அமைந்த அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் இம்முறை வன்பந்து துடுப்பாட்ட தொடரினையும் உள்வாங்கியமை வரவேற்க்க கூடியவிடயமாக இருக்கும் அதேவேளை போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள். போட்டி முடிவுகளை உடனுக்குடன் எமது பக்கத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.
Post a Comment