இரண்டாவது வெற்றியுடன் யாழ் பல்கலைக்கழகம்
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 13 ஆவது விளையாட்டு விழா தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்தவாரம் முதல் இடம்பெற்று வருகின்றன.
முதலாவது குழு நிலைப் போட்டியில் ருகுண பல்கலைக்கழக அணிக்கெதிராக 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற லோகதீஸ்வர் தலைமையிலான யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியினர், இரண்டாவது போட்டியில் கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக அணியினரை, களனி பல்கலைக்கழக மைதானத்தில் எதிர்கொண்டிருந்தனர்.
இதன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த யாழ் பல்கலைக்கழத்திற்கு, கல்க்ஹோகன், தனுசன் இணை அதிரடியான ஆரம்பத்தினை வழங்கினர். இதன்போது கல்க்ஹோகன் 18 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 65 பந்துகளில் 115 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் களத்திலிருந்த தனுசன் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மூன்றாவது இலக்கத்தில் களம் நுழைந்த பிரசாந்த் 94 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்து சதம்பெறும் சந்தர்ப்பத்தினை தவறவிடட்டார்.
அணியின் விக்கெட் காப்பாளர் சந்திரசிறி யாழ் தரப்பின் சார்பில் மூன்றாவது அரைச்சதத்தினை பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 402 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி.
கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் சார்பில் சொய்சா 3 விக்கெட்டுகளையும், கதுகொட 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பதிலிற்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தினர் முதலாவது ஓவரிலிருந்தே விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்தனர்.
இதனால் 27.1 ஓவர்களில் வெறுமனே 118 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தினர். பந்துவீச்சில் அசத்திய ஜனந்தன் மற்றும் ஹெட்டியாராச்சி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், சுபேந்திரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
எனவே, 284 ஓட்டங்களால் பெரு வெற்றிபெற்ற யாழ் பல்கலை அணி குழு C இல் முதலாவது இடத்தை வகிக்கின்றனர்.
எதிர்வரும் சனிக்கிழமை, குழுவில் இரண்டாவது இடம் வகிக்கும் பேராதனை பல்கலைக்கழக அணியினை தமது சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளவிருக்கின்றனர் யாழ் பல்கலைக்கழகத்தினர். Yarlsports இன் வாழ்த்துக்கள்

Post a Comment