அரச அதிபர் வெற்றிகிண்ணம் சம்பியனாகியது யாழ் மாவட்ட செயலகம்

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் (02/08) வியாழக்கிழமை யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளின் முடிவில் 27புள்ளிகளை பெற்ற யாழ் மாவட்ட செயலகம்  2019 ம் ஆண்டு ஓவரோல் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 20புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும், 14புள்ளிகளை பெற்ற சங்கானை பிரதேச செயலகம் 3ம் இடத்தினையும், 10புள்ளியினை பெற்ற வேலனை,நல்லூர் பிரதேச செயலகங்கள் 4ம் இடத்தினையும்,7புள்ளியினை பெற்ற யாழ்ப்பாணம், கோப்பாய், சாவகச்சேரி பிரதேச செயலகங்கள் 5ம் இடத்தினையும் பெற்று கொண்டன. அனைத்து அணிகளுக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.