இறுதிக்குள் நுழைந்தது சுதுமலை சலஞ்சர்ஸ்

அரியாலை சனசமூக நிலையத்தின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் அணிக்கு 9 பேர் 8 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டியில்  நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சுதுமலை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக அணி
முதலாவது போட்டியில் அரியாலை சனசமூக நிலைய அணியினை 8 இலக்குகளாலும்
இரண்டாவது போட்டியில் யுனி ஸ்டார் விளையாட்டு கழகத்தை 2 இலக்குகளாலும் வெற்றிபெற்றது
அரையிறுதி போட்டியில் பலம் மிக்க கொட்டடி இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை இறுதிப்பந்தில் 1 இலக்கினால் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது
இளங்கதிர் விளையாட்டுக்கழகம்  71/5  (8)
சுதுமலை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம்  75/7  (8)

No comments

Powered by Blogger.