அரச அதிபர் வெற்றிகிண்ணம் யாழ் மாவட்ட செயலகத்தை பந்தாடிய யாழ் பிரதேச செயலகம்

யாழ்ப்பாணம் அரச அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கெட்  வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகளில் இவ்வருடம் கிறிக்கெற் தொடர்  நடைபெற்று வருகின்றது.  அந்தவகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணியை எதிர்த்து மாவட்ட செயலக அணியும் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மாவட்ட செயலக அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது.
12 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் மாவட்ட செயலக அணி 5விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு களமிறங்கிய யாழ்ப்பாணம் பிரதேச செயலக அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ராஜீவன் மற்றும் டிலக்சன் ஆரம்பம் முதலே அடித்தாட முற்பட்டனர். அதனால் ஓட்டம் சீரான வேகத்தில் பயணித்து.  தொடர்ந்து களமிறங்கிய விளையாட்டு உத்தியோகத்தர் வல்லவனின் அதிரடி ஆட்டத்தால் மாவட்ட செயலக அணி மிரண்டு போனது. ஓரே ஓவரில் 3சிஸ்சர்களை விளாசி அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.  இறுதி பந்துபரிமாற்றத்தில் 16 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் முதல் 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் பெறப்பட்டது. இறுதி 3 பந்துகளில் 13 ஓட்டங்கள்  பெறவேண்டியிருந்தது. பந்தை எதிர்கொண்ட கவிகரன் தொடர்ந்து 2 சிஸ்சர்களை காற்றில் பறக்கவிட மாவட்ட செயலக அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது.
2016ம் ஆண்டுக்கு பின் இடம்பெற்ற போட்டிகளில் மாவட்ட செயலக அணியுடன் தொடர்ந்து தோல்வியை சந்தித்த யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்தமையை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
இறுதிப்போட்டி யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகத்திற்கும் இடையில் 01/08/2019  நண்பகல் 11மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறுவதுடன் தொடர்ந்து அரச அதிபர் வெற்றிக்கிண்ண போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறும்.

No comments

Powered by Blogger.