யாழின் முதலாவது புற்தரை தொடரில் சம்பியனாகியது சென்றலைட்ஸ்

ஞானம்ஸ் பெயின்ட் நிறுவனத்தினர் யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் யாழ் மாவட்டத்தில் முதன்முதலாக புற்தரை ஆடுகளத்தில் நடத்திய அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.06) யாழ் புனிதர் பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில்   நடைபெற்றது. போட்டியின் இறுதியில் சென்றலைட்ஸ்  விளையாட்டு கழகத்தினை முதலாவது தகுதி போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த   KCCC விளையாட்டு கழகத்தினை  எதிர்த்து பற்றீசியன்ஸ் விளையாட்டு கழகத்தினை 2வது தகுதி போட்டியில் வீழ்த்தி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம் மோதியது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவுசெய்து களமிறங்கிய KCCC அணியினர்
சென்றலைட்ஸ் அணியின் இளம் வீரர் விதுசன் மற்றும் அணித்தலைவர் ஜெரிக்துஷாந்தின் பந்துவீச்சில் தடுமாறி அனைத்து இலக்குகளையும் இழந்து 79 ஓட்டங்களை மட்டும் பெற்று கொண்டது. பதிலுக்கு ஆடிய சென்றலைட்ஸ் அணி 15.3 பந்து பரிமாற்றங்களில் 3இலக்குகளை மட்டும் இலந்து 7இலக்குகளால் வெற்றிபெற்று 2019ம் ஆண்டு ஞானம்ஸ் தொடரின் சம்பியனாக முடி சூடியது. போட்டியின் ஆட்டநாயகன்-ஜெரிக்துஷாந்- (சென்றலைட்ஸ்),  தொடர் நாயகன்-  டர்வின்(சென்றலைட்ஸ்). தொடரில் சம்பியனாகிய சென்றலைட்ஸ் வி்.க , போராடிய KCCC வி.க மற்றும் தொடரினை சிறப்பா ஒழுங்கமைத்து நடாத்திய ஞானம்ஸ் பெயின்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.