மாவட்ட சம்பியனாகியது யாழ் பிரதேச செயலகம்
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா இன்று சுன்னாகம் ஸ்கந்தரோதயா கல்லூரி மைதானத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. போட்டியில் விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து சிறப்பிக்க அனைத்து பிரதேச செயலாளர்களின் முன்னிலையில் பல வரலாறுகளினை மாற்றி 13தங்கம் ,13வெள்ளி,12வெண்கல பதக்கங்களை பெற்று யாழ் மாவட்ட சம்பியனாகியது யாழ் பிரதேச செயலகம். வெற்றிக்கு உழைத்த யாழ் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வல்லவகுமரன் மற்றும் வீர,வீராங்கனைகளுக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்...
Post a Comment