அரியாலை மைந்தன் மீண்டும் சர்வதேச நடுவராக

23 வயதுக்குட்பட்ட ஆசிய நாடுகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு நடுவராக அரியாலை மைந்தன்.

மியான்மார் நாட்டில் எதிர்வரும் 03.08.2019 ஆம் திகதி முதல் 11.08.2019 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிக்கு அரியாலை மண்ணின் மைந்தன் திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்கள் பணியாற்றவுள்ளார்.

இவர் இலங்கையில் உள்ள ஆறு சர்வதேச கரப்பந்தாட்ட மத்தியஸ்தர்களில் ஒரேயொரு தமிழ் மத்தியஸ்தர் என்பது குறிப்பிடதக்கது.

சர்வதேச கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்களுக்கு Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.