தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் வெற்றிபெற்ற இலங்கை அணி.

தர்ஜினி சிவலிங்கத்தின் சாதனையுடன் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளிவைத்தது இலங்கை!


உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 50 – 88 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைபந்தாட்ட அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் ஜுலை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை லிவர்பூலில் நடைபெற்று வருகின்றது.

இதில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள அவுஸ்ரேலியா மற்றும் வட அயர்லாந்து, சிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இடம்பெற்ற தமது குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும் தோல்வியடைந்த காரணத்தினால் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தது.

எனினும், இலங்கை வலைப்பந்து அணி இந்த தொடரில் 13 தொடக்கம் 16 வரையிலான இடத்தை பெறும் அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் சிங்கப்பூர், பிஜி மற்றும் சமோவா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளது.

அதன்படி இந்த சுற்றில் சிங்கப்பூர் அணியை இலங்கை அணி இன்று (திங்கட்கிழமை) எதிர்கொண்டது.

முதலாவது கால் மணி நேர ஆட்டப் இலங்கை அணி 21 – 11 என முன்னிலை பெற்றது. இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் இலங்கை அணி 24 – 11 என்று முன்னிலை பெறும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது ஆட்டநேர பகுதியியையும் இலங்கை அணி 26 -14 என தனதாக்கிக் கொண்டது.

கடைசி ஆட்ட நேர பகுதியையும் இலங்கை வீராங்கனைகள் தமதாக்கிக் கொண்டதனால் இலங்கை அணி 17 – 14 என தனதாக்கி போட்டியில் 80 – 50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், 78 முயற்சிகளில் 76 புள்ளிகள் கோல்களைப் போட்டு இந்த உலகக் கிண்ணத் தொடரில் தனிப்பட்ட சாதனையைப் படைத்தார்.

No comments

Powered by Blogger.