இறுதியில் நியூசிலாந்து
Yarl Express
Yarl Express Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
MAIN MENU
இந்திய அணி சொதப்பல் – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.
மன்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ரஃப்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழையால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து போட்டி நேற்று மீண்டும் ஆரம்பமாகியது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பாக, ரோஸ் ரெய்லர் 74 ஓட்டங்களையும், வில்லியம்ஸன் 67 ஓட்டங்களையும், நிக்கோலஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், புவனேஸ்குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன், பும்ரா, கார்த்திக் பாண்டியா, ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் 240 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
லோகேஸ் ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஒவ்வொரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இந்திய அணி, டோனி மற்றும் ஜடேஜாவின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் ஓட்டங்களைக் குவித்தது.
எனினும் ஜடேஜாவின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, இந்திய அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில் 18 ஓட்டங்களால் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி சார்பாக ஜடேஜா 77 ஓட்டங்களையும், டோனி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, ரிஷப் பந்த் மற்றும் கார்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், மற் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ரென்ற் போல்ட், மிற்செல் சான்ட்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Post a Comment