தேசிய சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31வது தேசிய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் குருநாகல் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது போட்டியின் அரையிறுதியில் கொழும்பு மாவட்ட அணியினை 65:48 ரீதியில் வீழ்த்திய யாழ் மாவட்ட மங்கையர் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து. தீர்மாணம் மிக்க இறுதிப்போட்டியில் நடப்பு அந்தஸ்து அங்கீகாரத்துடன் களமிறங்கிய யாழ் மங்கையர் அணி கொழும்பு நாகர்புர அணியினை 48:45 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது மட்டுமின்றி தொடர்ந்து நான்கு வருடங்கள் தொடர்சம்பியன் சாதனையையும் நிலைநாட்டியது. போட்டியில் பங்குபற்றிய வீராங்கனைகளுக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment