உலக கிண்ணம் 1வது அரையிறுதி போட்டி இன்று

உலக கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று.

12 ஆவது உலக கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிக் கொள்கின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி Manchester மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும்.

இதேவேளை 12 ஆவது உலக கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி  நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிக் கொள்கின்றன.

அத்துடன் 12 ஆவது உலக கிண்ணத் தொடரின்  இறுதி போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி லண்டன் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.