JCL தொடரின் முதலாவது வெற்றியுடன் அரியாலை
மருதனார்மடம் AB விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தும் JCL தொடரின் தெரிவு போட்டிகளின் வரிசையில் இன்று தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மானிப்பாய் பரிஸ் விளையாட்டு கழகத்தினை வீழ்த்தி அடுத்த சுற்றினை தக்கவைத்தது அரியாலை மத்திய விளையாட்டு கழகம். போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அரியாலை மத்தி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்ய முதலில் ஆடிய பரிஸ் 136/10(18.3) துடுப்பாட்டத்தில் சஜித்-58 ஓட்டங்கள். பந்துவீச்சில் சுஜிவன்-4/32(4) கவிந்தன்-3/31(3.3) 137 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய அரியாலை மத்தி பிரிசங்கர்-50, கோபிராம்-25 ஓட்டங்களின் உதவியுடன் 16.3 பந்து பரிமாற்றங்களில் வெற்றி இலக்கினை அடைந்தது. அரியாலை மத்திய விளையாட்டு கழக அணிக்கு
yarlsports இன் வாழ்த்துக்கள்.
yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment