பழிதீர்த்த பாகிஸ்தான் வீழ்ந்தது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு  எதிராக 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
12 ஆவது உலககிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது.

349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில்  விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 14 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோசன் ரோய் 8 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 32 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 13 ஓட்டத்துடனும், இயன் மோர்கன் 9 ஓட்டத்துடனும், ரூட் 107 ஓட்டத்துடனும், பட்லர் 103 ஓட்டத்துடனும், மொய்ன் அலி 19 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 21 ஓட்டத்துடனும், ஜோப்ர ஆர்ச்சர்  ஒரு ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் மார்க்வூட் 10 ஓட்டத்துடனும், அடில்  3 ரஷித் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 ஷெடப் கான், மொஹமட் அமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஹபீஸ், மலிக் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துடனான தொடரில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழி தீர்த்ததுடன், கடந்த 11 ஒரு நாள் போட்டிகளிலும் அடைந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
 பாகிஸ்தான் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.