கிண்ணம் வென்றது குருநகர் பாடும்மீன்

தூய ஒளி சுற்றுக்கிண்ண -2019 தொடரின் இறுதிப்போட்டி நேற்று(16/06) மாலை குருநகர் பாடும்மீன் வி.க  மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில்  குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து ஞானமுருகன் அணி மோதியது. 

இரு அணிகளும் சமபலம் பொருந்தியதால் பலத்த எதிர்பார்ப்புடன்  தொடங்கிய  ஆட்டத்தின் முதல் பாதி இரு அணி வீரர்களின் பலத்த போராட்டத்தின் மத்தியில்  0-0 நிறைவடைந்தது

இரண்டாம் பாதியில் சுதாரித்து  ஆடத்தொடங்கிய பாடும்மீன் அணி. பந்தை தமது கட்டுபாட்டில் வைத்து தமது தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சாந்தன் கீதனின் உதவியுடன் அடுத்தடுத்து 2 கோல்களை பெற பாடும்மீன் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைவகிக்க சுதாகரித்து ஆடிய ஞானமுருகன் அணி 1கோலினை பெற போட்டியில்  2:1 ரீதியில் பாடும்மீன் அணி வெற்றி பெற்று தூயஒளி வெற்றி  கிண்ணத்தினை கைப்பற்றியது.
பாடும்மீன் அணிக்கும் இறுதிவரை போராடிய ஞானமுருகன் அணிக்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.