கிண்ணம் வென்றது கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் KCCC

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் நடாத்தும் வருடாந்த துடுப்பாட்ட தொடரின் 2019 ஆண்டுக்கான தொடரின் இறுதிப்போட்டி 26/05 ஞாயிற்று கிழமை கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அரையிறுதியில் பற்றீசியன்ஸ் வி.கழகத்தை வீழ்த்திய KCCC அணியும் சென்றலைட்ஸ் வி.கழகத்தை வீழ்த்திய TCC அணியும் இறுதியில் மோதியிருந்தன. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற TCC அணி முதலில்  துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
ஆரம்பத்தில் KCCC வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறிய TCC அணி ஒரு கட்டத்தில் 11ஓட்டங்களுக்கு  5இலக்குகளை இழந்திருந்தது (11/5) எனினும் பின்வரிசை வீரர்கள் ரஜீந்தன்-36, சுரேஷன்-30 ஓடங்களின் உதவியோடு 136 ஓட்டங்களை பெற்றுகொண்டது. பந்து வீச்சில் நிரூசிகன் 34/7(8).
TCC-136/10(32.4)
137 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய KCCC அணி பனுஜனின்-39 ,ஜனுதாஸ்-32 ஓட்டங்களின் உதவியுடன் 25பந்து பரிமாற்றங்களில் வெற்றி இலக்கினை  அடைந்தது KCCC-139/7(25). இறுதிப்போட்டியின் விருதுகள்
*சிறந்த துடுப்பாட்ட வீரன்- பானுஜன்(KCCC)
*சிறந்த பந்துவீச்சாளர்- நிருசிகன்(KCCC)
*சிறந்த களத்தடுபாளர்- அசோக்(TCC)
*ஆட்டநாயகன்-நிருசிகன்(TCC)  KCCC அணிக்கு
yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.