குண்டெறிதல் வேம்படி பாணவிக்கு தங்கம்

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ர.தாரணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ர.தாரணி 6.10 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், சென்ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த யூட் எஸ்த்தர் 5.95 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ச.தேனுஷா 5.95 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்து கொண்டனர். அனைத்து மாணவிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.