மேற்கிந்தியதீவுகள் அணிக்கு வெற்றி வீழ்ந்தது பாக்கிஸ்தான்

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது.
106 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் கிறிஸ் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்தபோது ஷெய் ஹோப் 4.3 ஆவது ஓவரில் மொஹமட் அமீருடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டுவைன் பிராவோமும் எதுவித ஓட்டமுமின்றி 6.2 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு வெளியேறினார். 
இதனால் மேற்கிந்தியத்தீவுள் அணி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது. தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக நிகோலஷ் பூரண் மற்றும் கெய்ல் ஜோடி சேர்ந்தாட மேற்கிந்தியத்தீவுள் அணி 8.2 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை பெற்றது.
அத்துடன் அதிரகாட்டிய கிறிஸ் கெய்ல் 10.2 ஆவது ஓவரில் மொத்தமாக 33 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களலாக  அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார் (77-3).
தொடர்ந்து சிம்ரன் ஹேட்மேயர் களமிறங்கி துடுப்பெடுத்தாட மேற்கிந்தியத்தீவுகள் அணி 13.2 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்ததுடன், 13.4 ஓவரில் நிகோலஷ் பூரண் ஒரு ஆறு ஓட்டத்தை விளாச மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றியிலக்கை அடைந்தது.
ஆடுகளத்தில் சிம்ரன் ஹேட்மேயர் ஓட்டத்துடனும், நிகோலஷ் பூரண் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணிசார்பில் மொஹமட் அமிர் 3 விக்கெட்டுக்களை எடுத்தார்.

No comments

Powered by Blogger.