சம்பியனாகியது இளவாலை யங்ஹென்றீஸ்

சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது இளவாலை யங்கென்றீஸ் அணி….
வலிகாமம் லீக்கின் ஆதரவுடன் பிங்கள மோதக மாமரபிள்ளையார் ஆலய அறங்காவலரும் மகா வித்துவானுமாகிய, கலா பூசனம் கலைவாருதி முகுதப்பிள்ளை விக்னேஸ்வரநாதன் ஞாபகார்த்தமாக அவரின் மைந்தன் ரமேஸ் அவர்களின் அனுசரணையில் வட்டுக்கோட்டை வி.க நடாத்தும் மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இளவாலை சென்.லூட்ஸ் அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றீஸ் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் யங்கென்றீஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
யங்கென்றீஸ் அணி சார்பாக சுரேந்தன், றெக்சன் ஆகியோர் தலா ஒரு கோலையும் மற்றும் சென்.லூட்ஸ் அணி சார்பாக தனுராஜ் ஒரு கோலையும் பெற்று கொடுத்தனர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக சுரேந்தர் அவர்களும், தொடர் நாயகனாக றெக்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

யங்கென்றீஸ் அணிக்கு yarlsports இன்  வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.