சம்பியனாகியது புங்குடுதீவு சென்சேவியர் அணி.

நண்பர்கள் வி.க தொடர் கிண்ணம் புங்குடுதீவு சென்.சேவியர் அணி வசம்.

புங்குடுதீவு நண்பர்கள் விளையாட்டு கழகம் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் புங்குடுதீவு சென்.சேவியர் அணியை எதிர்த்து புங்குடுதீவு நசரேத் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாததால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 04:03 என்ற கோல் கணக்கில் சேவியர் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக நசரேத் அணியை சேர்ந்த அஜித் அவர்களும், தொடராட்ட நாயகனாக சேவியர் அணியை சேர்ந்த சகாயநேசன் அவர்களும் மற்றும் சிறந்த கோல் காப்பாளராக அதே அணியை சேர்ந்த விதுசன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சென்.சேவியர் அணிக்கு yarlsports இன்  வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.