சம்பியனாகியது பொற்பதி இந்து விளையாட்டு கழகம்

கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய யாழ் மாவட்ட ரீதியான 6பேர் 5பந்துபரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட தொடரில் குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழகத்தை 5 இலக்குகளால் வீழ்த்தி சம்பியனாகியது பொற்பதி இந்து. முதலில் துடுப்பெடுத்தாடிய கொலின்ஸ் வி.க 82/2(5) பெற்று கொண்டது. அணி சார்பாக பிரகாஸ்-26, தாஸ்-25 ஓட்டங்களை பெற்று கொடுக்க பந்து வீச்சில் பொற்பதி இந்து சார்பாக காந்தன்-1/12 வீழ்த்தினார். பதிலுக்கு 83ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய பொற்பதி இந்து அணி சத்தியனின் 36ஓட்ட உதவியுடன் 85/1(5) வெற்றி இலக்கினை அடைந்தது. தொடரின் ஆட்டநாயகன் மற்றும் போட்டியின் ஆட்டநாயகனாக சத்தியன்(பொற்பதி இந்து) தெரிவு செய்யப்பட்டார். சம்பியனாகிய பொற்பதி இந்து வி.கழகத்துக்கும், தொடரினை சிறப்பாக நடாத்திய கரவெட்டி ஞானம்ஸ் வி.கழகத்திற்க்கும் Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.