சம்பியனாகியது குருநகர் கார்மேல்போய்ஸ்.
அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடமாகாண ரீதியில் நடாத்திய அணிக்கு 7 பேர் 5 பந்து பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் சம்பியனாகியது கார்மேல் போய்ஸ் அணி. குறித்த போட்டியின் அரையிறுதி 20/3 காலை 9.00 மணிக்கு நடைபெற்றது 1 வது போட்டியில் கார்மேல் போய்ஸ் அணி இணுவில் கலையொளி வீழ்த்தியும் இரண்டாவது அரையிறுதியில் கரவெட்டி கொலின்ஸ் அணி கிளிநொச்சி ஐக்கிய அணியை வீழ்த்தியும் இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்றன இறுதியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொலின்ஸ் அணி 5 ஓவரில் அனைத்து இலக்குகளையும் இழந்து 48 ஓட்டங்களை பெற்று கொண்டது பதிலுக்கு ஆடிய கார்மேல்போய்ஸ் அணி செல்ரனின் 22 ஓட்டங்களுடனும் றகீமின் 18 ஓட்டங்களுடனும் 4.4 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து சம்பியனாகியது..... இரு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment