அரையிறுதியில் குருநாகர் பாடும்மீன்
குருநகர் பாடும்மீன் அணி- அரையிறுதிக்குத் தகுதி யாழ்ப்பாணம் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணி. யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75ஆவது ஆண்டு நிறைவை முனினீட்டு யாழ்ப்பாண மாவட்ட நீதியாக நடத்தும் கால்பந்தாட்ட தொடரில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் மின் ஒளியில் நேற்று இரவு 7 மணிக்கு இடம் பெற்ற காலிறுதியாட்டத்தில், குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக அணி மோதியது. முதற் பாதி ஆட்டத்தின் 18 நிமிடத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணிக்கு தண்டனை உதை கிடைக்க அதனை பிராங்கோ கோல கா பதிவு செய்யமுதற் பாதி ஆட்ட நேர முடிவில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வைகித்தது. இரண்டவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணியினரும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாது போக இரண்டாம் பாதி முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.
Post a Comment