போராடி வென்ற அரியாலை கில்லாடிகள் 100
73 ஓட்டங்களை விரட்டிய அரியாலை கில்லாடிகள் 100 அணி, 9.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளைப் பறிகொடுத்து வெற்றியிலக்கை அடைந்தனர். நெல்லை பிளாஸ்டர்ஸ் விளை யாட்டுக்கழகம் நடத்திய துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டம், குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அரியாலை கில்லாடிகள் 100 அணியை எதிர்த்து லைட்னிங் கோக்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற லைட்னிங் கோக்ஸ் அணி 10 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது. திருபரன் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும், ஜெனி 18 ஓட்டங்களையும், துவாரகன் 11 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அரியாலை கில்லாடிகள் 100 அணி சார்பில் பந்து வீச்சில் அலன், கபில் இருவரும் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினார்கள். 73 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்து ஆடிய அரியாலை கில்லாடிகள் 100 அணி, 9.5 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. செல்ரன் 21 ஓட்டங்களையும், அயன் 12 ஓட்டங்களையும், அஜித் 11 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். லைட்னிங் கோக்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் ஜனா, சந்திரன், ஜெனி மூவரும் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகன் விருதை அரியாலை கில்லாடிகள் 100 அணி வீரர் செல்ரன் பெற்றுக் கொண்டார். சகலதுறை ஆட்டநாயகன் விருதை லைட்னிங் கோக்ஸ் அணி வீரர் சந்திரன் பெற்றுக் கொண்டார். சிறந்த நன்னடத்தை அணியாக கொக்குவில் கிங்ஸ் அணி தெரிவு செய்யப்பட்டது. அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான விருதை ஸ்ரைகஸ் அணி வீரர் அனோசன் பெற்றுக் கொண்டார். அதிகூடிய இலக்குகளைச் சரித்த வீரருக்கான விருதை ஸ்ரைகஸ் அணி வீரர் அஜந்தன் பெற்றுக் கொண்டார். அதிகூடிய ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீரருக்கான விருதை ஸ்ரைகஸ் அணி வீரர் அனோசன் தட்டிச் சென்றார்
Post a Comment