JSL இறுதிப்போட்டி சனிக்கிழமை


யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கம் முதன் முறையாக யாழின் 120 வீரர்களை உள்ளடக்கிய 8அணிகளை கொண்ட தொழில் முறை ரீதியான JAFFNA SUPER LEGE துடுப்பாட்டத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது... யாழ் மாவட்டதினை மட்டும் உள்ளடக்கிய *ARIYALAI WARRIORS *JAFFNA PANTHERS *VELANAI VENKAIKAL *KOKUVIL STARS *POINT PEDRO SUPER KINGS *THELLIYOOR TITANS *NALLUR BRANCOS *PANNAI TILKO மேற்படி 8அணிகள் பங்குபற்றிய போட்டியில் "குழுA" யில் முறையே முதல் இரு இடங்களை பிடித்த VELANAI VENKAIKAL மற்றும் KOKUVIL STARS அணிகளும் "குழுB" யில் முறையே முதல் இரு இடங்களை பிடித்த JAFFNA PANTHERS மற்றும் ARIYALAI WARRIORS அணிகளும் அடுத்த சுற்றுக்கு நுழைந்தன...

 முதலாவது தகுதி சுற்றில் இரு குழுக்களிலும் முதல் இடம்பிடித்த JAFFNA PANTHERS மற்றும் VELANAI VENKAI அணிகள் மோதிய போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்ற JAFFNA PANTHERS அணி முதலாவது அணியாக இறுதிக்குள் நுழைந்தது... அடுத்து நடைபெற்ற வேளியேற்றும் சுற்றில் இரண்டு குழுக்களிலும் இரண்டாம் இடங்களை பெற்ற ARIYALAI WARRIORS மற்றும் KOKUVIL STARS அணிகள் மோதின இப்போட்டியில் 8 இலக்குகளால் வெற்றி பெற்ற ARIYALAI WARRIORS அணி இரண்டாவது தகுதி சுற்றுக்குள் நுழைய தோல்வி அடைந்த KOKUVIL STARS அணி தொடரில் 4ம் இடத்தினை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது....

அடுத்து நடைபெற்ற இரண்டாவது தகுதிசுற்றில் முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த VELANAI VENKAI மற்றும் ARIYALAI WARRIORS அணிகள் மோதிய போட்டியில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்ற VELANAI VENKAI அணி இரண்டாவது அணியாக இறுதிபோட்டிக்குள் நுழைய தோல்வியடைந்த ARIYALAI WARRIORS அணி 3ம் இடத்தினை பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.....

தொடிரின் இறுதிப்போட்டியில் 09/02 சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் VELANAI VENKAI மற்றும் JAFFNA PANTERS அணிகள் மோதவுள்ளன.... போட்டி தொடர்பான செய்திகள் புகைப்படங்களை பார்வையிட yarlsports உடன் இணைந்திருங்கள்.....


jpl

No comments

Powered by Blogger.